உச்ச நீதிமன்ற தீ; விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில்

கொழும்பு உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் இடம்பெற்ற தீ அனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள வாழைத்தோட்டம் பொலிஸார் நேற்று முன்தினம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு விடயங்கள் உள்ளடக்கிய அறிக்கையை கையளித்துள்ளனர்.

வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்படி அறிக்கையை சமர்ப்பித்து அதன் உள்ளடக்கங்களை நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளனர். மேற்படி தீ அனர்த்தம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் மேற்படி அறிக்கையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தீ அனர்த்தம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதையும் வாழைத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

கொழும்பு புதுக்கடையில் உள்ள உச்ச நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் திடீர் தீ அனர்த்தம் ஏற்பட்டது. அதனையடுத்து கொழும்பு மாநகர சபை தீயணைப்பு படையினர், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அத்துடன் இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் அங்கு சென்று பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 12/18/2020 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை