பிரிட்டனின் விமானங்களுக்கு நெதர்லாந்து அரசினால் தடை

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் விமானங்கள் அனைத்துக்கும் தடை விதிப்பதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதிக அபாயம் கொண்ட புதிய ரகக் கொரோனா வைரஸ் பிரிட்டனில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்தத் தடை இன்றிலிருந்து ஜனவரி முதலாம் திகதி வரை நடப்பில் இருக்கும்.

விமானப் பயணங்களுக்குத் தடைவிதிக்கப்படும் அதே வேளையில் பிரிட்டனின் இதர போக்குவரத்து முறைகள் ஆராயப்படுவதாக நெதர்லாந்து அரசாங்கம் கூறியது. புது வகைக் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குக் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பதையொட்டி மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து ஆராயவுள்ளதாக அது குறிப்பிட்டது.

இவ்வேளையில், முடிந்த வரை பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

புதிய ரகக் கொரோனா வைரஸ் 70 வீதம் அதிகமாகத் தொற்றக்கூடிய அபாயம் கொண்டது என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.  

Mon, 12/21/2020 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை