பிரேசில் நகரை முற்றுகையிட்ட கும்பல் வங்கிகளில் கொள்ளை

தென்கிழக்கு பிரேசில் நகர் ஒன்றை முற்றுகையிட்டிருக்கும் ஆயுததாரிகள் அங்குள்ள வங்கிகளை கொள்ளையடித்திருப்பதாக நகர மேயர் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது ஒரு பொலிஸார் உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பதாக இராணுவ பொலிஸ் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு ஆரம்பமான இந்த முற்றுகை நேற்றுக் காலை வரை நீடித்துள்ளது.

அட்லாண்டிக் கடல் துறைமுக நகரங்களில் ஒன்றான கிரிகிள்வுட் என்ற நகரே முற்றுகை இடப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஊர் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி நகர மேயர் கிளாசியோ செல்வாரோ அதிகாலை இரண்டு மணிக்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தக் கொள்ளையர்கள் மூன்று அல்லது நான்கு இடங்களில் கொள்ளையிட்டுச் சென்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் தாக்குதல்தாரிகள் மீது பதில் தாக்குதல் தொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

வங்கிகளுக்குள் ஊடுருவிய இந்தத் தாக்குதல்தாரிகள் ஏ.டி.எம் இயந்திரங்களை தகர்த்து பொலிஸ் தலையீட்டை தவிர்க்க தடுப்புகள் மற்றும் தீவைப்புகளில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Wed, 12/02/2020 - 11:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை