Header Ads

நேற்று தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஜனவரி 11ஆம் திகதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஆறு பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் கடந்த மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்பார்க்கப்பட்டது. நேற்று வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் உரிய ஆவணங்களை கொண்டுவராததன் காரணமாக அரச தரப்பு சட்டத்தரணி விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் வழக்கு ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுழற்சி நிருபர

Wed, 12/09/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.