Header Ads

புதிய வகை கொரோனா ஜேர்மனியிலும் அடையாளம்

பிரிட்டனில் வெகுவேகமாகப் பரவி வரும் புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஜேர்மனியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இம்மாதம் 20ஆம் திகதி லண்டனிலிருந்து பிராங்பர்ட் சென்ற விமானப் பயணிக்கு விமான நிலையத்தில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பெர்லினில் உள்ள ஆய்வுக் கூடத்தில் அவரது உடல் திரவ மாதிரி சோதிக்கப்பட்டதில் புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அதிகாரிகள் கூறினர். பாதிக்கப்பட்ட நபர் ஜேர்மனி சென்றதிலிருந்து தமது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Sat, 12/26/2020 - 09:02


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.