மாலைதீவில் இலங்கையரின் உடல்கள் அடக்கம் செய்வதா?

முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் எதிர்ப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் தெரிவித்துள்ளார். மதம் மற்றும் அவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை பொருட்படுத்தாமல் மாலைதீவிற்கு வரும் வெளிநாட்டு விருந்தாளிகளை வரவேற்கின்றோம். அவர்கள் இங்கு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும் என விரும்புகின்றோம் என முன்னாள் ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெளிநாட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை இங்கும் புதைப்பதற்காக கொண்டுவருவதை என்னால் ஆதரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு இலங்கை விடுத்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதை தொடர்ந்தே முன்னாள் ஜனாதிபதி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

 

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை