பாகிஸ்தானில் துன்பங்களை அனுபவித்த உலகின் தனித்துவமிக்க இலங்கை யானை!

- கம்போடிய வனப்பகுதியில் விடுவிப்பு

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட இலங்கையின் காவன் யானை, பாகிஸ்தானில் இருந்து கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அது விடுவிக்கப்பட வேண்டிய வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யானை தொட்டு வரவேற்பது போன்ற ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மிருகக் காட்சிசாலையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த காவன் யானை, தற்போது புதிய சூழலை ஆராய்வதை பார்ப்பது சுவாரஸ்யமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சூழலுக்கு காவன் யானை இசைவாக்கமடைந்ததன் பின்னர், அது வனப்பகுதியில் விடுவிக்கப்படவுள்ளது. குறித்த வனப்பகுதியில் மேலும் மூன்று பெண் யானைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவன் யானையை மீட்கும் பணியில் பாரிய முயற்சிகளை மேற்கொண்ட பிரபல பொப் இசை பாடகியும் ஹொலிவுட் சினிமா நடிகையுமான சேர்லின் சகிஸியன் இந்தப் பயணத்தில் முழுமையாக பங்கேற்றுள்ளார்.

விடுவிக்கப்படும் வனப்பகுதிக்கு அருகாமையில் தற்காலிகமாக ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காவன் யானையின் தும்பிக்கையை மற்றுமொரு யானை தொட்டு வரவேற்பது போன்ற ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மிருகக் காட்சிசாலையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த காவன் யானை, தற்போது புதிய சூழலை ஆராய்வதை பார்ப்பது சுவாரஸ்யமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சூழலுக்கு காவன் யானை இசைவாக்கமடைந்ததன் பின்னர், அது வனப்பகுதியில் விடுவிக்கப்படவுள்ளது. குறித்த வனப்பகுதியில் மேலும் மூன்று பெண் யானைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Thu, 12/03/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை