அரசு தாமதமின்றி நல்லதோர் தீர்மானத்தை எடுக்க வேண்டும்

மு.கா.தலைவர் ஹக்கீம் சபையில் கோரிக்கை

 

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அரசாங்கம் தாமதமின்றி நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிப்படைவாதிகளை தலைத்தூக்கச் செய்யும் காரணியாக இது மாறிவிடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சடலங்களை அடக்கும் உரிமையும் அரசாங்கம் வழங்க வேண்டுமென 27/2 கீழ் கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

உயிரிழந்த முஸ்லிம்களின் 21 சடலங்களை அவர்களின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது சிவில் உரிமைக்கு எதிரானது. பாரிய பிரச்சினையை நோக்கி இந்த விடயம் செல்லலாம். முஸ்லிம் சமூகம் மிகவும் கவலையடைந்தது. இந்த கடுமையான கொள்கைகளில் இருந்து வெளிவாருங்கள்.

தாமதமின்றி இந்த விடயத்துக்கு அனுமதியளியுங்கள். அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட உறுப்பினராகவுள்ள திஸ்ஸ விதாரனவும் விசேட தொற்றுநோய் நிபுணர்தான். ஆகவே இந்த விடயம் அடிப்படைவாதிகளை தலைத்தூக்க செய்யும் காரணியாக உள்ளதால் அரசாங்கம் தாமதமின்றி நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஹக்கீம் எம்.பியின் உரையை தொடர்ந்து கருத்து வெளியிட்ட இஷாக் ரஹமான் எம்.பி.

நேற்றுமுன்தினம் உயிரிழந்த 20 மாத குழந்தையின் உடலையும் எரித்துள்ளளனர்.

இது பாரிய பாவமானச் செயல் எனத் தெரிவித்திருந்தார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை