கண்டியில் திடீரென உயிரிழந்த பெருமளவிலான குரங்குகள்

ஒருவகை விஷம் உடலில் பரவியதாக PCR சோதனையில் முடிவு

கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் ஏதோ ஒரு வகையான விஷம் உடலில் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பூங்காவில் பாரியளவிலான குரங்குகள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதில் குரங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் உடலில் விஷம் பரவியதானால் உயிரிழந்துள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பீட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Mon, 12/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை