சீன ஆய்வு விண்கலம் நிலவைத் தொட்டது

சீனாவின் ஆய்வு விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது.

நிலவில் இருந்து பூமிக்கு பாறை மற்றும் துகள் மாதிரிகளை சேகரித்து எடுத்துவரும் நோக்கிலேயே சாங் இ–5 ஆய்வு இயந்திரம் நிலவில் இறங்கியுள்ளது. நிலவின் எரிமலைப் பகுதியான மொன்ஸ் ரும்பர் என்ற பிரதேசத்தையே இந்த ஆய்வு விண்கலம் இலக்கு வைத்துள்ளது. இங்கு அடுத்த சில நாட்களை கழிக்கவிருக்கும் இந்த ஆய்வு இயந்திரம் அதன் சுற்றுப்பகுதியை ஆய்வு செய்து மேற்பரப்பில் உள்ள பொருட்களை சேகரிக்கவுள்ளது. இந்த ஆய்வு இயந்திரத்தில் கெமரா, ஸ்பெக்ட்ரோமீற்றர், ராடார், கரண்டி மற்றும் தோண்டும் கருவி போன்ற பல கருவிகளும் உள்ளன. குறிப்பாக நிலவில் இருந்து 2 கி.கி மண் அல்லது பாறைகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வருவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதன்போது இந்த ஆய்வு இயந்திரம் 2 கிலோமீற்றர் வரையில் நிலவின் மேற்பரப்பில் துளையிட்டு மாதிரிகளை சேகரிக்கவுள்ளது. 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துவரும் முதல் விண்கலமாகவும் இது பதிவாகவுள்ளது.

கடந்த மாதம் 24ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், சனிக்கிழமை அன்று நிலவின் நீள்வட்டப்பாதைக்குள் நுழைந்ததை தொடர்ந்து படிப்படியான நடவடிக்கைகள் மூலம் ஆய்வு இயந்திரம் தரையிறக்கப்பட்டுள்ளது.

Thu, 12/03/2020 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை