மஹர சிறை சம்பவம்; இடைக்கால அறிக்கை நேற்று நீதியமைச்சரிடம்

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 116 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை நடவடிக்கைகளில் இருபத்தைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் 100 மில்லியனுக்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது

அதேவேளை மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற குழப்பகரமான சம்பவங்களின் போது 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அந்த சடலங்களில் 07 பேரது சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள தாகவும் அதில் மூன்று சடலங்கள் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்படுவதற்காக சடலங்களில் விரல் அடையாள பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 12/08/2020 - 08:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை