அணு செயற்பாட்டை பலப்படுத்த ஈரானிய பாராளுமன்றம் அழைப்பு

ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாட்டின் அணு நிலையங்கள் மீதான சர்வதேச கண்காணிப்பை நிறுத்தும்படி ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், முன்னணி விஞ்ஞானி மொஹசன் பக்ரிசாதஹ்வின் கொலையில் கொலைகார சியோனிச அரசு தொடர்புபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெஹ்ரானில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பக்ரிசாதஹ் கொல்லப்பட்டார்.

வெளிநாட்டு அக்கிரமிப்பு செயற்பாடுகளுக்கு உடன் பதிலடி கொடுப்பதற்கு எமது நாட்டில் மிகச் சிறந்த அணு சக்தி தொழிற்துறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து சர்வதேச அணு சக்தி நிறுவனத்தின் கண்காணிப்பை நிறுத்த வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக வல்லரசு நாடுகளுடன் ஈரான் 2015இல் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி தனது அணுத் திட்டங்களை குறைப்பதற்கு ஈரான் இணங்கியமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/01/2020 - 17:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை