இங்கிலாந்தில் ஐம்பது பில்லியன் பவுண்ட் பணத்தை காணவில்லை

இங்கிலாந்தில் 50 பில்லியன் பவுண்ட் மதிப்புமிக்க நாணயத்தாள்கள் காணாமல்போயுள்ளன.அது குறித்து ஒரு விளக்கமும் இல்லாத நிலையில் நாணயத்தாள்களின் இருப்பிடம் மர்மமாகவே உள்ளது. இது குறித்து கார்டியன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

பிரிட்டனின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி, ரொக்கப் பயன்பாட்டின் மீது போதிய கண்காணிப்புச் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.தனது பெட்டகங்களில் உள்ள பல பில்லியன் பவுண்ட் மதிப்புமிக்க தங்கக் கட்டிகளை தீவிரமாக பாதுகாத்து வருவதற்கு வங்கி பெயர் பெற்றிருந்தாலும், வங்கி காணாமல் போன ரொக்க இருப்பைப் பற்றி அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நாணயத்தாள்கள் அதிகாரத்துவமற்ற வழிகளில் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்காலம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

இருப்பினும் நாணயத்தாள்களின் பயன்பாட்டைக் கண்காணிப்பது உண்மையிலேயே மிகவும் சிரமமான ஒன்று. காணாமல்போன நாணயத்தாள்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது சவாலான ஒன்றாகும்.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று சூழலில் நாணயத்தாள்களின் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது. மக்கள் பீதியடைந்து ரொக்கத்தை மறைத்து வைத்திருக்கலாம் என்று கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

Tue, 12/08/2020 - 14:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை