சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை நிவர்த்திக்க ஜனாதிபதி செயலணி

- ஜனாதிபதி பணிப்பு

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமையை நிவர்த்தி செய்யும் வகையில் விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறைக்கைதிகளை மனிதாபிமானத்துடன் அணுகி சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி கோட்டாபயராஜபக்‌ஷ மேற்படி பணிப்புரைகளை வழங்கியுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அவற்றுக்கு தீர்வுகாண பரிந்துரைகளை முன் வைப்பதற்காக நேற்றையதினம் மேற்படி பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அவர்களுக்கு புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை தயாரிப்பதன் அவசியம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 12/12/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை