நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மருந்து லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு அன்பளிப்பு

மேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியைப் வலுப்படுத்தும் மருந்து பெக்கட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு ஏதுவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதற்கான தேசிய ஔடத பானம் ஆயுர்வேத திணைக்களத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு தடவையில் இரண்டு தேக்கரண்டி வீதம் சூடான ஒரு கோப்பை தண்ணீரில் கலந்து காலையிலும் மாலையிலும் குடிக்க வேண்டும். 600 ஔதட மருந்துப் பெக்கட்டுகள் லேக் ஹவுஸ் நிறுவனத்துக்கு மேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் வழங்கியுள்ளது. நிறுவனத்தின் நலன்புரி நடவடிக்கையாக அங்கு பணிபுரிகின்ற சேவையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த மருந்து கலவைப்பவுடர் வழங்கப்படவுள்ளது.

இந்த மருந்து கலவைப் பவுடர் தொகுதி நிறுவனத்தின் பதில் பொதுமுகாமையாளர் (நிறுவன நடவடிக்கைகள்) சந்தன பண்டாரவினால் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான டபிள்யூ. தயாரத்ன, செயற்பாட்டுப் பணிப்பாளர் கனிஷ்க டி. விதாரனவுக்கு உத்தியோகபூர்வமாக நேற்று வழங்கப்பட்டது. சிரேஷ்ட முகாமையாளர் (போக்குவரத்து) திஸ்ஸ தம்மிக்க, முகாமையாளர் (வசதிகள்) அர்ஜுன தினேஷ் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

ஹோமாகம வலயத்தின் பிரஜா சுகாதார உத்தியோகத்தர் டாக்டர் இயேஷா முனசிங்கவும் இதில் கலந்துகொண்டார்.

Wed, 12/16/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை