Header Ads

முகக்கவசத்தால் விடுபட்டுபோன உணர்ச்சிகள்

- ஆய்வில் சுவாரசிய தகவல்

முகக்கவசம் அணிவதால் நன்றாகத் தெரிந்தவர்களைக் கூட அடையாளம் காண முடிவதில்லை. அத்தோடு முக உணர்ச்சிகளை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் கடந்த ஓராண்டாக முகக்கவசங்கள் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கொரோனா பெருந்தொடரிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் ஒரே வழியாக இந்த முகக்கவசங்களே இருக்கின்றன. உலகில் உருமாறிய கொரோனா வைரஸ் என பெருந்தொற்றின் இரண்டாம் பாகமும் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் முகக்கவசங்கள் இன்னும் சில மாதங்களுக்கு நம்முடன் தொடர்ந்து பயணிக்கவுள்ளன.

இந்த முகக்கவசங்கள் அணிவதால் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்பதைத் தாண்டி இதனால் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு என்ன சிக்கல்கள் ஏற்படுகிறது என கனடாவின் பென்-குரியன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில சுவாரசியத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முகக்கவசத்தால் முக உணர்ச்சிகளை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக கண்களைப் பார்த்து பேசினாலும் முக பாவனைகளை முழுமையாக காண முடிவதில்லை. இதனால் தகவல் தொடர்பும் சற்று பாதிக்கப்படுகிறது. முக அங்கீகாரத்தில் புதிய பரிணாமம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 பேர் கொண்ட ஒரு பெரிய குழுவுடன் ஆன்லைனில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முகக்கவசம் அணிந்த ஒருவரை அடையாளம் காண்பதற்கான விகிதம் 15% குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Mon, 12/28/2020 - 14:21


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.