முஸ்லிம்களின் அதிகளவான மரணத்தில் அஸாத் சந்தேகம்

கொரோனா மரணங்களின் பின்னணியில் பாரிய சந்தேகங்கள் உள்ளதால் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து சுயாதீனமாக விசாரிக்க வேண்டும் என முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.

22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையின் 10 வீத பரம்பலைக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்திலிருந்தே 80 வீதமான கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளமை பாரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றிருப்பதாக தனிமைப்படுத்தப்படும் மக்களுக்கு எவ்விதமான சிறப்பு மருந்துகளும் தரப்படுவதில்லையெனவும், தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு எதுவும் நடப்பதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவும் குணமடைந்ததாகக் கூறப்பட்டவர்கள் வீடு திரும்பி மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளமை இவ்விவகாரங்களின் பின்னணியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Thu, 12/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை