ஒரு இலட்சம் பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலில்!

கம்பஹாவிலே அதிகமானோர் −அஜித் ரோஹண

நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சம் பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதற்கமைய, நிகழ்கால தரவுகளின் அடிப்படையில் 95 ஆயிரத்து 825 பேர் வீடுகளின் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்திலே அதிகளவானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் 35 ஆயிரத்து 114 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைளை கட்டாயம் கடைபிடிக்குமாறும் பிரதி பொலிஸ் மாஅதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் குறித்த வீடுகளுக்குள் உட்பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 12/12/2020 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை