தென்கொரியாவில் பிரிட்டனின் கொரோனா திரிபு கண்டுபிடிப்பு

தென் கொரியாவில், பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகைக் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் லண்டனிலிருந்து தென் கொரியாவுக்குச் சென்றிருந்த மூவருக்கு அந்த வைரஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

தென் கொரியாவில் புதிதாக 808 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 819 ஆக உயர்ந்துள்ளது. 57,600க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், மிக உச்ச நிலைக்கு கொவிட்–19 கட்டுப்பாடுகளை உயர்த்தப்போவதில்லை என அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தென் கொரிய அரசாங்கம் அஞ்சுகின்றது. அதற்குப் பதிலாக, கட்டுப்பாடுகள் இன்னும் 6 நாட்களுக்கு நீடிக்கப்படும். கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை நடப்பில் இருக்கும்.  

Tue, 12/29/2020 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை