கொரோனா வைரஸ் தீவிர அச்சுறுத்தல் சூழலை கருத்திற் கொண்டு மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு என்ரிஜன் பரிசோதனை நடத்த தீர்மானம்

இராணுவத் தளபதி சவேந்திர சிவ்வா தெரிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு மேல் மாகாணத்திலிருந்து வெளிச்செல்லும் அனைவருக்கும் என்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயலகத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் எல்லைகளில் மூன்று முக்கிய இடங்களில் மேற்படி பரிசோதனை எழுமாறாக மேற்கொள்ளப்படுவதாகவும் நேற்று முதல் அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை. மக்கள் இக்காலகட்டங்களில் மேல் மாகாணத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாமென ஏற்கனவே சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகமான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்து வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  பாடசாலைகளை ஆரம்பித்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கொழும்பு ஆயர், இதன்போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினரின் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடும் வகையில் மக்களை விழிப்பூட்டுமாறு பிரதமர் கொழும்பு ஆயரிடம் தெரிவித்தார். இச் சந்தர்ப்பத்தில் கொழும்பு அநுநாயக்கர் அருட்தந்தை பெரி ப்ரோஹியர், கொழும்பு மறைமாவட்ட செயலாளர் ராஜன் ஆசீர்வாதம் உள்ளிட்ட அருட் தந்தையர்கள் மற்றும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சட்ட அதிகாரி ரொஹான் எதிரிசிங்க, அருண் கம்லத்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 12/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை