மனித செயற்பாடுகளால் சிங்கராஜ வனம் அழிந்து போகும் அபாயம்

இலங்கையின் ஈரவலய காடுகளில் ஒன்றாக கருதப்படும் சிங்கராஜ வனாந்தரம் மனித செயற்பாடுகளால் அழிவுக்குட்பட்டு வருவதாக பிரதேச மக்கள் மாத்திரமன்றி சுற்றாடல் ஆர்வலர்களும் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் 1978 ஆம் ஆண்டு கட்டாய கமத்தொழில் திட்டத்திற்கிணங்க சில குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 21/2 ஏக்கர் காணியில் பயிர் செய்யும் விவசாயிகள் சிங்கராஜ வனாந்தரத்தை நோக்கி சட்டவிரோதமாக விஸ்தரித்திருப்பதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் மூலிகை மரங்கள் மற்றும் பெறுமதி மிக்க மரங்களை வெட்டி வியாபாரம் செய்யும் நபர்களால் சிங்கராஜா வனாந்தரத்தின் பெரும் பகுதி படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிங்கராஜ வனாந்தரத்தின் பாந்து ராஎல எனும் பிரதான நீரூற்றிலிருந்து விரிந்து செல்லும் பசுமையான சிற்றாறுகளும் மகுருகந்த ரேனகந்த வனங்களும் தற்போது பாதிப்புகளை எதிர் கொண்டு வருவதாகவும் இவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகள் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்ற போதிலும் பொறுப்பு வாய்ந்தவர்கள் தமது கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் தற்போது இவை தீவிரமடைந்து சிங்கராஜ வனம் அழிந்து வருவதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.ஸ்ரீ யுனெஸ்கோ நிறுவனத்தின் சர்வதேச மரபுரிமையை உறுதிப்படுத்தியுள்ள இந்த வனாந்தரத்தின் பெருமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்கள் அனைவரினதும் பொறுப்பாகும் என இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Wed, 12/30/2020 - 12:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை