அண்டார்டிகாவுக்கும் கொரோனா பரவியது

குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள 36 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சிலி இராணுவத்தைச் சேர்ந்த 26 பேரும், 10 பராமரிப்பு ஊழியர்களுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 36 பேரும் சிலி நாட்டிற்கு அனுப்பப்பட்டு அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தற்போது உலகின் ஏழு கண்டங்களிலும் கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அண்டார்டிக்கில் உள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தடைபட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் சிலியில் 585, 000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அண்டார்டிகாவுக்கு நெருக்கமாக மக்கள் வாழும் பகுதியாக உள்ள சிலியின் டெகலனஸ் பிராந்தியம் நோய்த் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 12/24/2020 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை