வெவ்வேறு இடங்களில் தோன்றும் மாயத் தூண்

கலிபோர்னியா,ருமேனியா ஆகிய இடங்களில் உலோகத் தூண்கள் மாயமாகத் தோன்றியுள்ளன.

முதலாவதாக அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் காணப்பட்ட தூண் முக்கோண வடிவில் இருந்தது. சுமார் 12 அடி உயரமுள்ள அந்தத் தூணைப் போலவே ருமேனியாவின் பியட்ரா நீயம்ட் நகரில் இன்னொரு தூண் கண்டுபிடிக்கப்பட்டது.

பட்கா டோம்னி என்ற பீடபூமியின் அருகிலுள்ள தொல்பொருள் தளம் ஒன்றின் அருகே அந்த மாய உலோகத் தூண் தோன்றியதாக நம்பப்படுகிறது.

அதனையடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் அதைப் போன்ற இன்னொரு தூண் காணப்பட்டது. அட்டஸ்க்காடேரோ நகரிலுள்ள பைன் மலையின் உச்சியில் அது காணப்பட்டது. அதைக் காண உள்ளூர் மக்கள் பலரும் நீண்ட தூரம் மலை ஏறினர். அதன் படங்களையும் அவர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். அந்தத் தூண் 10 இலிருந்து 18 அடி உயரம் கொண்டது என்று அட்டஸ்க்காடேரோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

யூட்டாவில் முதன்முதலில் காணப்பட்ட உறுதியான தூணைப் போல் கலிபோர்னியாவின் தூண் இல்லை என அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. சற்றுத் தள்ளினால் அது விழுந்துவிடக்கூடும் என்று கூறப்பட்டது.  

Sat, 12/05/2020 - 17:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை