ஐரோப்பிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் உயரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்காகப் பொதுமக்கள் அங்கு ஒன்றுகூடும்போது முகக்கவசங்களை அணிந்துக்கொள்ளும்படி அந்த அமைப்பு அறிவுறுத்தியது.

ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேரிடமாவது வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுவதாகவும் நூறு பேராவது உயிரிழப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது. குளிர்கால விடுமுறைக்காக ஐரோப்பிய நாடுகளில் உற்றார் உறவினர்கள் அதிக அளவில் ஒன்றுகூடியதன் காரணமாகவே வைரஸ் பரவல் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய வட்டாரத்துக்கான அலுவலகம் குறிப்பிட்டது.

குடும்ப ஒன்றுகூடல்களைக் கூடுமானவரை வீட்டுக்கு வெளியில் வைத்துக்கொள்ளும்படி அது அறிவுறுத்தியது. வீட்டிற்குள் ஒன்றுகூடினாலும் முகக்கவசம் அணியும்படியும் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படியும் நிறுவனம் குறிப்பிட்டது.  

Fri, 12/18/2020 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை