தாய்லாந்தில் கொரோனா சம்பவங்கள் புதிய உச்சம்

அண்டை நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அண்மைய மாதங்களில் அதிகரித்த நிலையில், தாய்லாந்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நோய்த் தொற்றுச் சம்பவங்கள் உச்சமடைந்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கடலுணவுச் சந்தையுடன் தொடர்புபட்டு நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைநகர் பாங்கொக்கிற்கு அருகாமையில் இருக்கும் துறைமுக மாகாணமான சமுட் சகோன் முடக்கப்பட்டுள்ளது. இங்கேயே குறித்த சந்தை இருப்பதோடு அங்கு அண்டை நாடான மியன்மாரில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த ஊழியர்களுக்கு வீடுகளில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியில் முதல் கொவிட்–19 நோய்த் தொற்று பதிவான நாடாக தாய்லாந்து உள்ளது. எனினும் அது தொடக்கம் அந்த நாட்டில் நோய்ப் பரவல் குறைந்திருப்பதோடு அங்கு இதுவரை 4,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்களே பதிவான நிலையில் 60 பேரே உயிரிழந்துள்ளனர்.

 

Tue, 12/22/2020 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை