பங்களாதேஷில் ஐம்பதாவது சுதந்திர தின கொண்டாட்டம்

பங்களாதேஷ் மக்கள் கடந்த புதன்கிழமை தனது 50ஆவது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பங்களாதேஷை உருவாக்குவதை அனுமதிக்கும் வகையில் 1971 டிசரம்பர் 16 ஆம் திகதி கிழக்குப் பாகிஸ்தானின் இராணுவ சட்ட நிர்வாகத் தலைவர் லுதினன்ட் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் அமைந்திருந்த பாகிஸ்தான் இராணுவப் படைகளின் தளபதி சரணடையும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 

இதன்போது டாக்காவின் இந்திய மற்றும் பங்களாதேஷ் படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்ஜித் சிங் அவுரோரா முன்னிலையிலேயே நியாசி இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்;.    

1971 ஆம் ஆண்டு ஒன்பது ஆண்டு விடுதலைப் போருக்குப் பின்னரே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து பங்களாதேஷ் விடுதலை பெற்றது.

இந்த விடுதலைக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி அப்துல் ஹமீத் மற்றும் பிரதமர் ஷெய்க் ஹசீனா விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.  பங்களாதேஷ் தேசத் தந்தை செய்க் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் சுமார் மூன்று மில்லியன் மக்களின் உயர் தியாகத்திற்கு பின்னரே பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றது.

Sat, 12/19/2020 - 11:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை