திருநம்பியாக மாறினார் ஹொலிவுட் நடிகை எலன்
ஜூனோ திரைப்படத்திற்காக ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ஹொலிவுட் நடிகை எலன் பேஜ் தன்னை திருநம்பியாக அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பெயரையும் எலியட் பேஜ் என்று மாற்றியுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த எலன் பேஜ், ஜூனோ, இன்செப்சன், டூ ரோம் வித் லவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2014இல் தன்னை ஒருபாலின ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்ட எலன், எம்மா என்ற பெண்ணை மணந்தார்.
இதன் பின்னர் ஒருபாலின சமூகத்துடன் இணைந்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில், தற்போது தாம் திருநம்பியாக மாறிவிட்டதாகவும், தனது பெயரை எலியட் பேஜ் என்று மாற்றிக்கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
“நான் ஒரு திருநம்பி என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்.
என்னுடைய பெயர் எலியட். இதை எழுதுவதும், இப்போது இந்த இடத்தில் இருப்பதும் என்னுடைய அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். இந்தப் பயணம் முழுக்க எனக்கு ஆதரவளித்த அற்புதமான மனிதர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
from tkn
Post a Comment