ஜோ பைடன், ஹாரிஸ் ஆண்டின் சிறந்தவர்களாக ‘டைம்’ தேர்வு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் இந்த ஆண்டின் சிறந்த நபராக டைம் இதழில் இடம்பெற்றுள்ளனர்.

அட்டைப் படத்தில் அவர்களது புகைப்படத்தை வெளியிட்ட டைம் இதழ், ‘அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அமெரிக்கத் தேர்தலை ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் எவ்வாறு கையாண்டார்கள் என்பது குறித்து டைம் இதழ் பாராட்டி எழுதியுள்ளது.

காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம் இதழின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1927 ஆம் ஆண்டு தொடக்கம் செய்திகளில் அதிகம் பேசப்படுவோரை தேர்வு செய்து டைம் இதழ் ஆண்டின் சிறந்தவர்களாக கௌரவித்து வருகிறது.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதவியில் இருக்கும் டொனால்ட் டிரம்பை தோற்கடித்த ஜோ பைடன் வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 12/12/2020 - 17:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை