நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எந்த ஒரு நீதியரசரும் புதிதாக நியமிக்கப்படவில்லை

- சேவைமூப்பு அடிப்படையிலே நியமனங்கள் வழங்கப்பட்டன என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எந்த ஒரு நீதியரசரும் புதிதாக நியமிக்கப்படவில்லை. சேவைமூப்பு அடிப்படையிலே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

20 ஆவது திருத்தம் நிறைவேற்றிய பின்னர் புதிதாக 6 உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதம நீதியரசருக்கு தேவையானவாறு நீதியரசர்கள் நியமிக்கப்படுவதில்லை.அவர் பரிந்துரை செய்தாலும் ஜனாதிபதி தான் நியமனம் வழங்குகிறார்.நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எந்த ஒரு நீதியரசரும் நியமிக்கப்படவில்லை.

நீதி அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

மஹர சிறை சம்பவம் தொடர்பில் பேசுவோர் நாம் நியமித்த குழுவின் அறிக்கையை வைத்துத் தான் பேசுகின்றனர்.கடந்த ஆட்சியில் போன்று தமக்கு தேவையானவர்களை இட்டு எமக்கும் குழு நியமித்திருக்கலாம். ஆனால் நாம் வெளிப்படை தன்மையான விசாரணை முன்னெடுத்தோம்.அந்தக்குழுவின் அறிக்கையின் சிறு துண்டுகளை காட்டி பேசுகின்றனர்.தனிப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்து கைதிகள் மோதலில் ஈடுபட்டதோடு சிறைச்சாலை வளங்களையும் தீ வைத்துள்ளனர்.

அவர்களுக்கிடையிலான குரோதம் காரணமாக இந்த மோதல் வெடித்துள்ளது.தண்டனை விதிக்கப்பட்டோர் இந்த மோதலில் பங்கேற்கவில்லை.அரசாங்கமோ அமைச்சரவையோ துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை.கண்ணீர்புகை நடத்தி வானத்திற்கு துப்பாக்கியால் சுட்டு தடுக்க முயன்றிருக்கலாம்.எமக்கு மறைக்க எதுவும் கிடையாது.தவறு செய்தோருக்கு தண்டனை வழங்க பின்நிற்க மாட்டோம்.சிறையிலுள்ள 52 வீதமானவர்கள் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களாகும்.அவர்கள் சமூகத்திற்குள் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும். கடந்த ஆட்சியை போன்று நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு செய்த வேறு ஆட்சி கிடையாது.எப்.சி.ஐ.டி என சட்டவிரோத பொலிஸ் பிரிவு அமைத்து தெரிவு செய்து தினமும் வழக்கு விசாரித்தார்கள்.

பொய்யாக வழக்குகள் தாக்கல் செய்தால் அவர்கள் விடுதலையாகி வருவார்கள்.நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாப்பவர்களாக இருந்தால் எப்படி அவர்களுடன் தொலைபேசியில் பேசுவார்கள்.சி.ஐ.டியுடன் தொலைபேசியில் பேசுவார்களா.நாம் ஒருபோதும் நீதிமன்ற சுயாதீனத்திற்கு தலையீடு செய்ய மாட்டோம்.

2 வருடங்களுக்கு நீதி அமைச்சிற்கு 332 அமைச்சு பணியாளர்கள் இருக்கிறார்கள்.அமைச்சு தற்பொழுது உள்ள இடத்தில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்.புதிதாக நியமித்துள்ள நீதியரசர்களுக்காக இடவசதி அளிக்க வேண்டும்.இது தொடர்பாக நீதியரசரும் என்னுடன் பேசினார்.நாம் அர்ப்பணம் செய்தே வேறு இடத்திற்கு அமைச்சை கொண்டு செல்கிறோம்.அமைச்சை தூர இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. நல்ல நோக்குடனே வேறு இடத்திற்கு செல்கிறோம்.நீதி அமைச்சை மாற்றாமல் நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதையா எதிரணி விரும்புகிறது.யாரையும் இலக்கு வைத்து நாம் நீதிமன்றங்கள் உருவாக்க மாட்டோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

Fri, 12/11/2020 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை