புதிய வைரஸ் தொற்று: பீஜிங்கில் அவசரநிலை

சீனத் தலைநகர் பீஜிங்கில் 13 பேரிடம் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதால் அதிகாரிகள் அவசரகால நிலையில் செயல்பட்டுவருகின்றனர்.

பாதிக்கப்பட்டோர் அனைவரும் பீஜிங் கெப்பிட்டல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஷுன் யீ நகரைச் சேர்ந்தவர்கள்.

வார இறுதியின்போது நகர அதிகாரிகள் குடியிருப்பாளர்களிடம் தீவிரப் பரிசோதனைகளை நடத்தினர். வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகப் பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டின்போது தேவை ஏற்பட்டாலொழிய நகரை விட்டு வெளியே பயணம் செய்வதைத் தவிர்க்கும்படி ஷுன் யீ நகரக் குடியிருப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டுக்கும் சீனப் புத்தாண்டுக்கும் அரசாங்க ஊழியர்கள் பீஜிங்கைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீனாவில் புதிதாக 21 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் 15 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களாவர். 

Tue, 12/29/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை