‘தடுப்பு மருந்து கட்டாயமில்லை’ உலக சுகாதார அமைப்பு

உலகெங்கும் அனைவருக்கும் கொவிட்–19 தடுப்பு மருந்தைச் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் திட்டம் ஏதுமில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

அவரவர் சூழ்நிலைக்கு ஏற்பவும், எத்தகைய வேலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும், தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்வது குறித்து முடிவெடுக்கும் உரிமை தனிநபர்களுக்கே தரப்படவேண்டும் என்று அது குறிப்பிட்டது.

மருத்துவமனைகளில் முக்கியப் பணியாற்றுவோர், தங்கள் நலன் கருதியும், நோயாளிகளின் பாதுகாப்பு கருதியும் தடுப்பு மருந்துக்கு வலுவாகப் பரிந்துரைக்கப்படுவர்.

பொதுமக்கள் அனைவருக்கும் கட்டாயத் தடுப்பு மருந்து எனும் உத்தியைவிட, தேவைப்படுவோருக்கும், எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும் தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற அது நம்பிக்கை தெரிவித்தது.

முன்னதாக ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகத்தின் கீழ், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Wed, 12/09/2020 - 15:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை