கொழும்பு துறைமுக நகருக்கான முதலாவது முதலீடு ஒரு பில். டொலர் பிரதமர் முன்னிலையில் ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பு துறைமுக நகரத்துக்கான முதலாவது முதலீடு தொடர்பில் நேற்று உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற விஷேட நிகழ்வின் போதே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி, கொழும்பு துறைமுக நகரில் கொழும்பு சர்வதேச நிதி மத்திய நிலையம் நிர்மாணிப்பதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடு தொடர்பிலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

எல்.ஓ. எல். சி. குறூப் மூலோ பாய முதலீட்டு பிரிவான ப்ரவுண்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் சைனா ஹாபர் என்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றுக்கிடையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

1.4 பில்லியன் அமெரிக்க டொலர் அடிப்படை முதலீடு மற்றும் 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அனைத்து முதலீடுகளை உள்ளடக்கிய கொழும்பு துறைமுக நகர், தெற்காசியாவின் பிரபல வர்த்தக, வதிவிட, மற்றும் உல்லாசப் பயணிகள் பிரதேசமாக திகழ்கிறது.

இரண்டு கட்டங்களாக நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் மேற்படி கொழும்பு துறைமுக நகர்த் திட்டம் 6.8 ஹெக்டேயர் நிலப்பரப்பில் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 12/18/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை