கொரோனாவால் ஆபிரிக்காவில் மலேரியா அச்சுறுத்தல் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக துணை சஹாரா பிராந்தியத்தில் மலேரியா தடுப்பில் ஏற்பட்டிருக்கும் இடையூறு காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிறிய அளவான இடையூறு கூட ‘கணிசமான உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

துணை சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தில் மலேரியா தடுப்பு சிகிச்சைகள் 10 வீதம் குறைந்தால் கூட 19,000 மேலதிக உயிரிழப்புகள் நேரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவே 25 வீத இடையூறு நிலை 46,000 ஆகவும் 50 வீத இடையூறு 100,000 வரையும் மேலதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் உள்ளது. ‘இதன் முன்னெடுப்புகள் ஸ்தம்பித்துள்ளன’ என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் டொக்டர் மட்சிடிசோ டோடி தெரிவித்துள்ளார்.

2019இல் உலகெங்கும் 229 மில்லியன் மலேரியா நோய்ச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டு சராசரி எண்ணிக்கை மாற்றமின்றி காணப்படுகிறது. நுளம்பினால் பரவும் இந்த நோயினால் 2019இல் 409,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tue, 12/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை