ஜப்பானில் 9 மைல்கள் நீண்ட வாகன நெரிசல்

ஜப்பானில் கடும் பனிப்புயல் காரணமாக போதிய உணவு மற்றும் குடிநீர் இன்றி நெடுஞ்சாலை வாகன நெரிசலில் 1000க்கும் அதிகமானவர்கள் கடந்த புதன்கிழமை இரவு முழுவதையும் கழித்துள்ளனர்.

டோக்கியோ மற்றும் நிகாட்டா மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமை இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை காலையிலேயே இந்த நெரிசல் முடிவுக்கு வந்துள்ளது.

நெடுஞ்சாலையின் மத்தியில் பனிக்குவியலில் கார் ஒன்று சிக்கியதை அடுத்தே இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் படிப்படியாக வாகனங்கள் அந்த நெரிசலில் சிக்கிக்கொள்ள அது 9 மைல்கள் தூரம் வரை நீண்டு சென்றதாக நெடுஞ்சாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. சில நேரங்களில் வாகனங்கள் மெல்ல மெல்ல நகர்ந்தபோதும் சில வாகனங்கள் ஒரே இடத்தில் 40 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் சிக்கிக்கொண்டன. 

ஜப்பானின் மத்திய மற்றும் வடக்கு பிராந்தியங்களில் கடும் பனிப்புயல் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Sat, 12/19/2020 - 17:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை