மோட்டார் வாகன திணைக்கள ஊழியர்கள் 600 பேருக்கு இடமாற்றம்

மோட்டார் வாகன திணைக்கள ஊழியர்கள் 600 பேருக்கு இடமாற்றம்-More than 600 Staff of RMV-Department of Motor Traffic Transferred

- பல்வேறு முறைப்பாடுகளை அடுத்து நடவடிக்கை
- புதியவர்களைத் தவிர ஏனைய அனைவரும் இடமாற்றம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் 600 பேருக்கும் அதிகமானோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அளககோன் தெரிவித்தார்.

இலங்கை நிர்வாக சேவை, கணக்காய்வாளர் சேவை, ஒன்றிணைந்த சேவை, திணைக்கள சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரையும் இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், இலஞ்ச ஊழல் தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய, ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து அமைச்சர் இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து, அரசாங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, இவ்வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களைத் தவிர, 600 இற்கும் மேற்பட்ட, திணைக்களத்தில் பணிபுரிந்த ஏனைய அனைவரையும் இவ்வாறு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Fri, 12/18/2020 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை