பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 50 வீதமான மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில்

சாந்த பண்டார எம்.பியின் கேள்விக்கு பந்துல குணவர்தன பதில்

2020ஆம் ஆண்டு அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள 30,000 மாணவர்களில் 14,969 பேருக்கு அதாவது 50 சதவீதமானவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஆளுங்கட்சி எம்.பி. சாந்த பண்டார எழுப்பிய பல்கலைக்கழகப் புலமைப்பரிசில்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு அப்பால் உயர்தரப் பரீட்சை சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் நிதி வழங்கப்படுகிறது. ஹாபொல புலமைப்பரிசிலுக்கு தகுதியான மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவு செய்கிறது. வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் கோரிக்கையின் பிரகாரம் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தான் மஹாபொல நிதியத்திற்கு அனுப்பி வைக்கும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து அரச பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கே மஹாபொல புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.

05 இலட்சத்திற்கும் குறைவான வருமானத்தை பெறும் குடும்பங்களின் மாணவர்கள் மஹாபொல புலமைப்பரிசிலுக்கான தகுதியை இழக்கும் சந்தர்ப்பங்களில் உயர்த்தரத்தில் அவர்கள் பெற்றுக்கொண்ட வெட்டுப்புள்ளியின் பிரகாரம் மஹாபொல புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 12/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை