எத்தியோப்பிய இராணுவத்தினரால் 42 சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை

எத்தியோப்பியாவில் 100 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டு 42 சந்தேக நபர்கள் அந்நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து முன்னாள் மற்றும் இந்நாள் அரச அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெனிசகுல்–குமுஸ் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிராத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்களின் வீடுகளுக்கு தீ வைத்த தாக்குதல்தாரிகள் மக்களை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்திருந்தனர். அந்தப் பிராந்தியத்திற்கு பிரதமர் அபிய் அஹமது வருகை தந்து மறு நாளில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் பிராந்தியத்தில் குடியேறிய சிறுபான்மை சமூகத்தினர் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதோடு தாக்குதல்தாரிகள் யார் என்பது உறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதல்தாரிகள் மீதான இராணுவத்தின் தேடுதல் வேட்டையின்போது 42 பேர் கொல்லப்பட்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அம்புகள் உட்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Sat, 12/26/2020 - 15:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை