40 வயதான ஆடவருக்கு விச ஊசி மூலம் மரண தண்டனை

கடைசி நேர கருணை கோரல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவின் இன்டியானாவில் பிரென்டன் பெர்னார்ட் என்ற கைதிக்கு கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

40 வயதான பெர்னார்ட் தனது பதின்ம வயதில் இருக்கும்போது 1999 ஆம் ஆண்டு கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றங்காணப்பட்டார். இதன்மூலம் கடந்த 70 ஆண்டுகளில் அமெரிக்க மத்திய அரசில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் இளம் குற்றவாளியாக அவர் இடம் பெற்றுள்ளார்.

விச ஊசி செலுத்தப்படுவதற்கு முன்னர் தாம் கொலை செய்த தம்பதியின் குடும்பத்தினரிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

டொட் மற்றும் ஸ்டாசியா பாக்ளே தம்பதியிடம் கொள்ளையில் ஈடுபட்டபோதே அவர்கள் கொல்லப்பட்டனர்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறுவதற்கு முன்னர் மேலும் நான்கு மரண தண்டனைகள் நிறைவேற்றப்படவுள்ளன.

இந்த மரண தண்டனைகள் திட்டமிட்டபடி இடம்பெற்றால் அமெரிக்க வரலாற்றில் கடந்த நூற்றாண்டுக்கு மேலான காலத்தில் அதிக மரண தண்டனை நிறைவேற்றிய ஜனாதிபதியாக டிரம்ப் பதிவாவார்.

 

Sat, 12/12/2020 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை