இஸ்ரேலில் 3ஆவது முறை பொது முடக்கம் அறிமுகம்

கொவிட்–19 நோய்த்தொற்று காரணமாக இஸ்ரேலில் மூன்றாவது முறை நாடுதழுவிய முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கிய சில நாட்களில் முடக்கம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் வரும் ஞாயிற்றுகிழமையிலிருந்து இரண்டு வாரம் முடக்கம் நடப்பிலிருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. நோய்ப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால், மேலும் இரண்டு வாரத்துக்கு முடக்கம் நீடிக்கப்படலாம் என்றும் அது கூறியது.

பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தைத் தாண்டிச் செல்ல முடியாது. தடுப்பூசி போடச் செல்வோருக்கு அனுமதி உண்டு.

இஸ்ரேலில் 385,022 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 3,150 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sat, 12/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை