வீட்டு வன்முறை: பிரான்சில் 3 பொலிஸார் சுட்டுக்கொலை

மத்திய பிரான்சில் வீட்டு வன்முறை தொடர்பில் விசாரிக்கச் சென்ற மூன்று பொலிஸார் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தொலைதூர கிராமம் ஒன்றுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேலையில் சென்றிருக்கும் பொலிஸார் அங்கு வீடொன்றில் இருந்து பெண் ஒருவரை மீட்க முயன்றபோது 48 வயதான ஆடவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

ஆரம்பத்தில் ஒரு பொலிஸாரை சுட்டுக்கொன்ற அந்த ஆடவர் மற்றொருவருக்கு காயம் ஏற்படுத்தினார். தொடர்ந்து அங்கு வந்த மேலும் இரு அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரச வழங்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கிதாரி அந்த வீட்டுக்குத் தீவைத்துள்ளார்.

வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் வீட்டுக் கூரையில் பாதுகாப்புப் பெற்ற நிலையில் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு காரணமான சந்தேக நபரைத் தேடி தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொலிஸாருக்கு தமது நாளாந்த பணிகளில் உள்ள அச்சுறுத்தலை இந்த சம்பவம் காட்டுவதாக உள்துறை அமைச்சர் கெரால்ட் டர்மனின் தெரிவித்தார்.

Thu, 12/24/2020 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை