Header Ads

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 344 மாணவர்கள் விடுதலை

வட மேற்கு நைஜீரியாவில் கடந்த வாரம் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 344 மாணவர்களும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் கட்சினா மாநில ஆளுநர் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சில மாணவர்கள் தொடர்ந்தும் கடத்தியவர்களின் பிடியில் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமியவாத ஆயுதக் குழுவான பொக்கோ ஹராம் பொறுப்பேற்றிருப்பதோடு அது ஆரம்பத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கடத்தப்பட்ட மாணவர்களும் காண்பிக்கப்பட்டனர்.  விடுவிக்கப்பட்ட இந்த மாணவர்கள் அனைவரும் பிராந்திய தலைநகர் கட்சினா சிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவர்கள் விரைவில் குடும்பத்தினருடன் இணைக்கப்படுவார்கள் என்றும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

னினும் இந்த மாணவர்கள் எவ்வாறு விடுவிக்கப்பட்டார்கள் என்பது பற்றி உறுதி செய்யப்படவில்லை. இந்த மாணவர்கள் கன்னாராவில் அரச பாடசாலையில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகளால் கடந்த வாரம் கடத்திச் செல்லப்பட்டனர்.  

Sat, 12/19/2020 - 13:04


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.