நைஜீரியாவில் 300 சிறுவர்களை கடத்திய கும்பல் சுற்றிவளைப்பு

நைஜீரியாவின் வட மேற்கு கட்சினா மாநிலத்தில் பாடசாலை சிறுவர்களை பணயக் கைதிகளாக பிடித்திருக்கும் ஆயுததாரிகள் இருக்கும் பகுதியை அரச துருப்புகள் சுற்றிவளைத்துள்ளன.

இந்த சம்பவத்தில் தொடர்ந்து 300க்கும் அதிகமான சிறுவர்கள் காணாமல்போயிருப்பதாக மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களின் பெற்றோர் பாடசாலையில் கூடி தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு நிர்வாகத்தை கோரி வருகின்றனர். தமது மூன்று மகன்களில் இருவர் காணாமல்போயிருப்பதாக அபுபக்கர் லவால் என்ற தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.

800க்கும் அதிகமான மாணவர்கள் கற்கும் பாடசாலை மீதே ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல்தாரிகள் மீட்புப் பணம் கேட்பதாக ஜனாதிபதி முஹமது புஹாரியின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் கொள்ளையர்கள் இருப்பதாக அரசு குறிப்பிடுகிறது. இந்தப் பகுதியில் இவ்வாறான குற்றக் கும்பல்கள் மீதான அரசின் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு ஆண்டுகளில் வடக்கு நைஜீரியாவில் கொள்ளையர்களின் தாக்குதல்களில் 1,100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான குற்றங்களுக்கு எதிராக அரசு நீதியை நிலைநாட்ட தவறி இருப்பதாகவும் அது குற்றம்சாட்டியுள்ளது.

Tue, 12/15/2020 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை