300 மணி நேரத்தில் 3 மில்லியன் பால் மண்டலங்கள் அடையாளம்

அவுஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த தொலைநோக்கி ஒன்று சாதனை காலத்திற்குள் பிரபஞ்சத்தின் பெரும்பகுதிகளை வரைபடமாக்கியுள்ளது. இதன்மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி திறக்கப்பட்டிருப்பதாகவும் புதிய பால் மண்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அவுஸ்திரேலிய விஞ்ஞான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வானொலித் தொலைநோக்கி வெறுமனே 300 மணி நேரத்திற்குள் சுமார் மூன்று மில்லியன் பால் மண்டலங்களை வரைபடமாக்கியுள்ளது. இது விண்வெளியில் 10 ஆண்டுகள் மேற்கொள்ளும் தரவுச் சேமிப்புக்கு இணையான அளவாக உள்ளது.

உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சிகளுக்காக இந்தத் தரவுகள் பொது வெளியில் கிடைக்கப்பெறும் என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட டேவிட் மக்கோனல் தெரிவித்துள்ளார்.

தெளிவான 903 படங்களை ஒன்றிணைத்தே இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வானின் பரந்த வெளியை உள்ளடக்கும் வகையில் 36 டிஷ் அன்டெனாக்களை ஒன்றிணைத்ததாக ‘அஸ்கெப்’ என்று அழைக்கப்படும் இந்த வானொலி தொலைநோக்கி அமைந்துள்ளது. இது தெற்கு அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ளது.

 

Wed, 12/02/2020 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை