அமெரிக்காவில் 2ஆவது கொரோனா தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் திட்டம்

மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகள் 94 வீதம் செயல்திறன்மிக்கவை என்றும் அவை பாதுகாப்பானவை என்றும் அமெரிக்க உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் மூலம் அமெரிக்காவில் பயன்படுத்த அனுமதிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி என்னும் தகுதியை மொடர்னா பெறவுள்ளது.

மொடர்னா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால், தீய பக்கவிளைவுகள் ஏற்படுவது அரிது எனக் கட்டுப்பாட்டு அமைப்பு குறிப்பிட்டது.

30,000 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 94 வீதம் எனத் தெரியவந்தது.

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில், பைசர் தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300,000ஐத் தாண்டியதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.

இன்று வியாழக்கிழமை மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதல் வழங்குவது குறித்து, தடுப்பு மருந்து நிபுணர் குழு சந்திக்கவுள்ளது.

அந்தக் குழுவின் ஒப்புதலும் கட்டுப்பாட்டு அமைப்புத் தலைவரின் முறையான ஒப்புதலும் கிடைத்தால் 24 மணி நேரத்திற்குள் மொடர்னா தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணி ஆரம்பமாகும்.

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை