27 ஆண்டுகள் உறைநிலை கருவில் குழந்தை பிரசவம்

27 ஆண்டுகளாக உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கருவைக் கொண்டு அமெரிக்காவில் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் பிறந்த மொல்லி கிப்சன் என்ற அந்தப் பெண் குழந்தையின் கருமுட்டை கடந்த 1992 ஒக்டோபர் மாதம் தொடக்கம் உறைநிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2020 பெப்ரவரியில் இந்த கருவைக் கொண்டு டினா மற்றும் பென் கிப்சன் தம்பதி அதனைப் பெற்று கருவுறச் செய்துள்ளனர்.

இதன்மூலம் நீண்ட காலம் உறைநிலையில் வைக்கப்பட்ட கருவில் பிறந்த குழந்தை என இந்தக் குழுந்தை புதிய சாதனை படைத்துள்ளது. இதன்போது அவரது மூத்த சகோதரியான எம்மா படைத்த சாதனையையே மொல்லி கிப்சன் முறியடித்துள்ளார்.

எம்மா 24 ஆண்டுகள் உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கருவைக் கொண்டு 2017 நவம்பரில் பிறந்தார். 1991 ஆம் ஆண்டு பிறந்த டினாவுக்கு இயற்கையாக கருவுற முடியாத நிலையிலேயே டென்னசியில் இருக்கும் தேசிய கரு தான மையத்தில் இருந்து உறை நிலையில் வைக்கப்பட்ட கருவை பெற்றுள்ளார்.

Fri, 12/04/2020 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை