சீனாவில் 250,000 பேருக்கு கொரோனா பரிசோதனை

சீனாவில் செங்டு பகுதியில் 250,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்–19 நோய்த்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அங்கு சிலர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானதால், வட்டார மக்களை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு மூத்த தம்பதிக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட தம்பதியின் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவில் கொரோனா வைரஸ் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

செங்டு பகுதியில் இது வரை 255, 200 பேருக்கு

நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உணவுகளிலும், அவை சார்ந்த பொட்டலங்களிலும் கொரோனா வைரஸ் தங்கியிருக்கலாம் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு முன்னர் தெளிவுபடுத்தியிருந்தது.

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை