2030இல் ஜப்பானில் பெட்ரோல் வாகனங்களுக்கு முழுத் தடை

ஜப்பான் அரசாங்கம் 2030களுக்குள் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக என்.எச்.கே செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

ஜப்பானில் 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நீக்கப் பிரதமர் யோஷிஹிடே சுகா உறுதி கூறியுள்ளார்.

அதற்கான திட்டத்தை ஜப்பான் தொழில்துறை அமைச்சர் ஆண்டிறுதிக்குள் தயார் செய்வார் என நேற்று நடந்த செய்திக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானில் உள்ள எல்லாப் புதிய வாகனங்களும் மின்சாரத்தில் இயங்குபவையாக இருப்பதை உறுதிசெய்ய தொழில்துறை அமைச்சு முனைகிறது. அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகும் அரசாங்கக் கொள்கைகள், முதலீடுகள் ஆகியவை கரியமில வாயு வெளியேற்றத்தைச் சமநிலைப்படுத்த வழிவகுக்கும் என பருவநிலை ஆர்வலர்களும் எரிசக்தி மாற்ற நிபுணர்களும் நம்புகின்றனர்.  

 

Fri, 12/04/2020 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை