கொவிட்–19: கலிபோர்னியாவில் புதிய முடக்கநிலை நடைமுறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து அங்கு பெரும் பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

40 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த மாநிலத்தில் சுமார் 85 வீதமானவர்கள் இந்த முடக்கநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் விடுமுறையை உள்ளடங்கியதாக இந்தக் கட்டுப்பாடுகள் குறைந்தது மூன்று வாரங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பல வர்த்தகங்கள் மூடப்பட்டு, தமது வீடுகளுக்கு அப்பால் எவருடனும் சந்திப்புகளை ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

அண்மைய வாரங்களில் அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இடம்பெற்ற விடுமுறை காலத்தை ஒட்டியே அமெரிக்காவில் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் புதிய அதிகரிப்பை காட்டியுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த மாநிலத்தில் புதிதாக 30,000 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நோய்த் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அங்கு 1.3 மில்லியன் தொற்று சம்பவங்களும் சுமார் 20,000 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

Tue, 12/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை