கொவிட்–19: லண்டனில் கட்டுப்பாடு அதிகரிப்பு

லண்டனில் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மிகக் கடுமையான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வைரஸ் பரவல் அதற்குக் காரணம் என்று அரசாங்கம் அறிவித்தது.

லண்டனில் ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் வைரஸ் தொற்று உருமாறியுள்ளது அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சர் மெட் ஹென்காக் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக வைரஸ் பரவல் அதிகரித்த காரணத்தால் மூன்று அடுக்கு கட்டுப்பாடுத் திட்டத்தை அரசாங்கம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தது. லண்டன் அப்போது இரண்டாம் அடுக்கில் இருந்தது.

அண்மைய நிலவரப்படி அது மூன்றாம் அடுக்குக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டாம் அடுக்கில், மதுக்கூடங்களும் உணவகங்களும் குறிப்பிட்ட சில விதிமுறைகளின் கீழ் செயல்பட அனுமதிக்கப்படும்.

மூன்றாம் அடுக்கில் அவை அனைத்தும் உணவை வாங்கிச் செல்லும் சேவையை மட்டும் தொடரலாம். 

Wed, 12/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை