கொவிட்–19: தென்கொரியாவில் 9 மாதங்களில் இல்லாத உச்சம்

தென் கொரியாவில் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவாக கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ளது.

இனிவரும் நாட்களில் வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், தென் கொரியா அதன் விழிப்பு நிலையை உச்சத்துக்கு உயர்த்தியுள்ளது.

வைரஸ் பரவலால் புதிதாக பாதிக்கப்பட்ட 629 பேரில் 600 பேருக்கு உள்ளூரில் தொற்று ஏற்பட்டது.

மூன்றாவது நாளாக புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

தற்போதைய கொவிட் நிலையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இனிவரும் நாட்களில் அன்றாடம் 700லிருந்து 1,000 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் வரை உறுதி செய்யப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வைரஸ் தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இந்த வாரம் சவால்மிக்கதாக இருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றை ஆரம்பத்தில் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக தென் கொரியா உள்ளது.

அந்நாட்டில் இதுவரை 36,332 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 536 பேர் இந்தப் பெருந் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

Sat, 12/05/2020 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை